ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் அரசு விளையாட்டு விடுதிக்கு மாணவ- மாணவிகள் தேர்வு

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் அரசு விளையாட்டு விடுதிக்கு மாணவ- மாணவிகள் தேர்வு

Update: 2022-11-29 20:26 GMT

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தேர்வு சென்னை, கோவை, அரியலூர், ஈரோடு உள்பட மொத்தம் 20 மாவட்டங்களில் நடந்து வருகிறது. இதில் கிரிக்கெட், கால்பந்து, தடகள போட்டிகளில் சிறந்த விளங்கும் மாணவ- மாணவிகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாணவ- மாணவிகள் ஆர்வமாக கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினார்கள். இந்த தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்