பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

உடுமலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இதில் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

Update: 2022-09-03 19:00 GMT


உடுமலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இதில் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

விளையாட்டு போட்டிகள்

உடுமலை ரோட்டரி சங்கத்தின் சார்பில் யுவா விழா என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இந்த விளையாட்டு போட்டிகள் உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானம் மற்றும் ரோட்டரி இல்லம் ஆகிய இடங்களில் நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் ஆக்கிபோட்டி, கால்பந்து போட்டி, கூடைப்பந்து போட்டி, கைப்பந்து போட்டி ஆகிய போட்டிகளும், ரோட்டரி இல்லத்தில் தமிழ் பேச்சு போட்டி, ஆங்கில பேச்சு போட்டி, ஓவியப்போட்டி, களிமண் சிற்பம் அமைத்தல் ஆகிய போட்டிகளும் நடந்தன.

மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடந்த இந்த போட்டிகளில் 5-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிப்பவர்கள் (ஜுனியர்), 9 மற்றும் 10-ம் வகுப்பு படிப்பவர்கள் (சீனியர்), 11 மற்றும் 12-ம் வகுப்பு படிப்பவர்கள் (சூப்பர் சீனியர்) என்று 4 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள 77 பள்ளிகளைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இன்று

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 100 மீட்டர், 200மீ, 400மீ, 1,500மீ, 1,600மீ ஓட்டப்பந்தயங்கள், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளும், ரோட்டரி இல்லத்தில் வினாடி-வினா, சதுரங்கம், மாறுவேடம், நடனம் ஆகிய போட்டிகளும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உடுமலை ரோட்டரி சங்கத்தலைவர் ரகுநாதன் ராஜு, செயலாளர் ஏ.எல்.சரவணக்குமார், பொருளாளர் ஆர்.விவேகானந்தன்மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

இதில் இன்னர்வீல் மற்றும் ரோட்ராக்ட் சங்கத்தினரும் பங்கேற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்