தர்மபுரியில்மாவட்ட இளையோர் தடகள போட்டிகள்3-ந் தேதி நடக்கிறது

Update: 2023-08-25 19:00 GMT

தர்மபுரி மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 3-ந் தேதி நடக்கிறது.

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட தடகள கழக செயலாளர் அறிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தடகள போட்டிகள்

தர்மபுரி மாவட்ட அளவில் இளையோர் தடகள போட்டிகள் வருகிற 3-ந் தேதி காலை 7 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. 18 மற்றும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்படும்.

16 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் 100 மீட்டர், 300 மீட்டர், 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 60 மீட்டர், 600 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளும் நடத்தப்படும்.

பிறப்பு சான்றிதழ்

போட்டியில் பங்கேற்பதற்கான நேரடி பதிவு செப்டம்பர் 3-ந் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை நடக்கும். அதைத்தொடர்ந்து போட்டிகள் நடத்தப்படும். ஒரு போட்டியாளர் 2 போட்டிகளில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். போட்டியாளர்கள் பிறப்பு சான்றிதழின் நகலை கொண்டு வர வேண்டும்.

வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தேர்ந்தெடுக்கப்படும் வீரர், வீராங்கனைகள் செப்டம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நாமக்கல்லில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதி உள்ள வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்