கெட்டுப்போன சிக்கன் பிரியாணி பறிமுதல்
கெட்டுப்போன சிக்கன் பிரியாணி பறிமுதல்
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மசூதன்ரெட்டி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரபாவதி அறிவுறுத்தலின் பேரில் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர், ஸ்ரீராம்நகர், பாரிநகர் ஆகிய பகுதியில் சாலையோர கடைகள், பாஸ்ட் புட் உணவகங்கள், பஜ்ஜி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சாக்கோட்டை வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தியாகராஜன் தலைமையில் காரைக்குடி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார், தேவகோட்டை நகர உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன், கோட்டையூர் பேரூராட்சி செயல் அலுவலர் கவிதா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர். ஆய்வின் போது கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பிரியாணி, புரோட்டா மற்றும் செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட காளான் சிக்கன், மீன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் 6 வணிகர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர வணிக வளாக கடைகள், மளிகை கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள், கப் உள்ளிட்ட 145 கிலோ பொருட்கள் மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.