தமிழ்நாடு குறித்த பேச்சு: கவர்னருக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
தமிழ்நாடு குறித்த பேச்சு: கவர்னருக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றே அழைக்க வேண்டும் என்று கவர்னர் பேசியுள்ளது கடும் கண்டனத்துக்குரியதாகும். தமிழ்நாடு உள்ளிட்ட மொழிவழி தேசிய உரிமையை மறுதலித்து, ஒற்றை இந்தியாவை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ் திட்டம் எடுபடவில்லையே என்ற ஆத்திரமே அவரது பேச்சின் அடிநாதமாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பாதகமில்லாமல் அதன் செயல்பாட்டை வலுப்படுத்துவதைத்தான் கவர்னர் செய்ய வேண்டும். ஆனால் அந்த வேலையை கூட தாமதப்படுத்தி 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக் கிறார். கவர்னர் பதவியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமாகவும், ஆர்.எஸ்.எஸ். தொண்டராகவும் கவர்னர் செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.