பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்

தேசிய நூலக வார விழாவையொட்டிகிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடந்தது.

Update: 2022-11-19 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டத்துடன் இணைந்து 55- வது தேசிய நூலக வார விழாவை மாவட்ட மைய நூலகத்தில் நடத்தியது. மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி தலைமை தாங்கினார். இதில், வாசகர் வட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு 'படித்ததில் பிடித்தது' என்ற தலைப்பில் கட்டுரை போட்டி 'வாசித்தேன் வளர்ந்தேன்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி 'நூலகம் அறிவுச்சுடர்' என்ற தலைப்பில் கவிதை போட்டி ஆகியவை நடந்தன. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நூலகர் பிரேமா, வாசகர் வட்ட உறுப்பினர்கள் கமலேசன், கலைச்செல்வி, பன்னீர்செல்வம், பாலகிருஷ்ணன், நளினி, பத்மாவதி, நாமகிரி, கண்ணையன் மற்றும் போட்டி நடுவர்கள் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்