அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழக அரசு நடத்த இருக்கும் பேச்சுப்போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்யும் போட்டி நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுஜாத்தா மாக்டலின் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் அஜிதா முன்னிலை வகித்தார். இந்த பேச்சுப்போட்டியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேச்சுப்போட்டிக்கு நடுவர்களாக தமிழ்த்துறை பேராசிரியர்கள் செல்வமணி, சிவக்குமார் மற்றும் வணிகவியல் துறை பேராசிரியர் ரஜினிகாந்த் ஆகியோர் செயல்பட்டனர். போட்டியில் கல்லூரியில் 3-ம் ஆண்டு வணிக மேலாண்மை துறையில் பயிலும் மாணவி வினோதா முதலிடத்தையும், கணிதவியல் துறை முதுகலை இரண்டாமாண்டு மாணவி சாருமதி 2-ம் இடத்தையும் பிடித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித்துறை ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேஸ்வரன், மனோகரன் ஆகியோர் செய்திருந்தனர்.