சிறப்பு பல்நோக்கு மருத்துவமுகாம்

சங்கராபுரம், ரிஷிவந்தியம் பகுதியில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமுகாம் நாளை நடக்கிறது.

Update: 2023-06-22 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பொதுமக்கள் பயனடையும் வகையில் இலவச சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாமை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் பகண்டை கூட்டுரோடு அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் மூரார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாம்கள் நாளை (சனிக்கிழமை)காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. முகாமில் பொது மற்றும் இருதயம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், எலும்பு மருத்துவம் மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவம், ரத்த அழுத்த பரிசோதனை, பெண்களுக்கான மார்பாக புற்றுநோய், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய சிகிச்சை பொதுமக்களுக்கு அளிக்கப்படவுள்ளது. மேலும் சிறப்பு மருத்துவர்கள் மூலம் நோய் கண்டறியப்பட்ட நபர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு பதிவு பெற்ற முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் மூலம் இலவசமாக தொடர் சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்