திருப்பூர், அவினாசி, பல்லடம் கருவூலம் மூலமாக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் சிறப்பு முகாம் இடங்கள்
திருப்பூர், அவினாசி, பல்லடம் கருவூலம் மூலமாக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் சிறப்பு முகாம் இடங்கள்
திருப்பூர்
திருப்பூர், அவினாசி, பல்லடம் கருவூலம் மூலமாக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் சிறப்பு முகாம் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட கருவூலம்
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஆண்டு நேர்காணல் நடைபெற உள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்ட கருவூலம் மூலமாக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜூலை மாதம் 1, 12, 21 மற்றும் ஆகஸ்டு மாதம் 1, 11, 24 ஆகிய தேதிகளில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஜூலை மாதம் 4, 13, 22 மற்றும் ஆகஸ்டு மாதம் 2, 12, 25 ஆகிய தேதிகளில் தேவாங்கபுரம் அரசு நிலைப்பள்ளியிலும், ஜூலை மாதம் 5, 14, 25 மற்றும் ஆகஸ்டு மாதம் 3, 16, 26 தேதிகளில் அனுப்பர்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியிலும், ஜூலை மாதம் 6, 15, 26 மற்றும் ஆகஸ்டு மாதம் 4, 7, 29 தேதிகளில் சின்னச்சாமி அம்மாள் உயர்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது.
வருகிற ஜூலை மாதம் 7, 18, 27 மற்றும் ஆகஸ்டு மாதம் 5, 18, 30 ஆகிய தேதிகளில் மண்ணரையில் மனவளக்கலை மன்றத்திலும், ஜூலை மாதம் 8, 19, 28 மற்றும் ஆகஸ்டு மாதம் 8, 22 ஆகிய தேதிகளில் பெரிச்சிப்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியிலும், ஜூலை மாதம் 11,20,29 மற்றும் ஆகஸ்டு மாதம் 10,23 ஆகிய தேதிகளில் மங்கலம் ரோடு கருவம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது.
திருப்பூர், அவினாசி சார்நிலை கருவூலம்
திருப்பூர் சார்நிலை கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜூலை 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை, 11,12-ந் தேதிகளில் ரெயில் நிலையம் அருகில் உள்ள குமரன் வணிக வளாகத்திலும், ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரையும், 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலும் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், செப்டம்பர் மாதம ்1, 2-ந் தேதிகளில் சூலூர் கன்னம்பாளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளியிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
அவினாசி சார்நிலை கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜூலை 1, 12, 21, ஆகஸ்டு மாதம் 1, 11, 24-ந் தேதிகளில் அவினாசி ஓய்வூதிய சங்கத்திலும், ஜூலை 4, 13, 22 மற்றும் ஆகஸ்டு மாதம் 2, 12, 25-ந் தேதிகளில் அவினாசி ஓய்வூதிய ஆசிரியர் கூட்டமைப்பு அலுவலகத்திலும், ஜூலை 7,18-ந் தேதிகளில் அன்னூர் ஓய்வூதிய சங்கத்திலும், ஜூலை 8,19-ந் தேதிகளில் சேவூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், ஜூலை 15,18-ந் தேதிகளில் குன்னத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
பல்லடம்
பல்லடம் சார்நிலை கருவூலத்தில் ஓய்வதியம் பெறுபவர்களுக்கு ஜூலை 1,4,5,6,8,12,14,18,20,22,25,27,29 ஆகிய தேதிகளில் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஜூலை 7,15,26,28-ந்தேதிகளில் பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஜூலை 11,19-ந் தேதிகளில் கேத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஜூலை 13,21-ந் தேதிகளில் சுல்தான்பேட்டை சமுதாய கூடத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். முகாமில் ஓய்வூதியர்கள் ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, செல்போன் எண் ஆகியவற்றை கொடுத்து நேர்காணலில் பங்கேற்று பயன்பெறலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.