பஞ்சமுக பிரத்யங்கிரா கோவிலில் சிறப்பு யாகம்

பஞ்சமுக பிரத்யங்கிரா கோவிலில் சிறப்பு யாகம்

Update: 2022-07-25 16:35 GMT

மானாமதுரை

உலகம் முழுவதும் நோய் தொற்றுகள் குறைய வேண்டியும், பொதுமக்களை காக்கும் வகையிலும் இயற்கையின் பேரழிவுகளிலிருந்து காத்து உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் சிறப்புடன் வாழ வேண்டி மானாமதுரை பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவிலில் நவ சண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகம், தஞ்சை கணபதி சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. இதில் மகா சுதர்சன யாகம், புத்ர காமேஷ்டி யாகம் நடந்தன. இன்று(செவ்வாய்க்கிழமை) வன துர்கா யாகமும், ஆயுஸ்ஹோமமும் நடைபெறுகிறது .சகல கஷ்டங்கள் நீங்கும் பஞ்சமுக பிரத்யங்கிரா யாகமும் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது.மிக முக்கிய யாகமான மகா நவசண்டி ஹோமம் 28-ந்தேதி வியாழக்கிழமை ஆடி அமாவாசை தினத்தன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக பிரத்யங்கிர மடாலய நிர்வாகி ஞானசேகர சுவாமி, ராஜ குமாரி ஆகியோர் மேற்பார்வையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்