வண்டுறை மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்
வண்டுறை மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறைமாரியம்மன் கோவிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. இதையொட்டி சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.