மகா அபிஷேகத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு யாகம்
மகா அபிஷேகத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.
சிதம்பரம்,
உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மார்கழி, மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்கள் என ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் புரட்டாசி மாத மகாபிஷேகம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி நேற்று முன்தினம் முதல் கோவில் வளாகத்தில் யாக சாலை அமைத்து நவகிரக ஹோமம், மகா ருத்ர ஜபம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகங்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 மணிக்கு சிவகாமசுந்தரிக்கும் ஸ்ரீமந் ஆனந்த நடராஜருக்கும் லட்சார்ச்சனையும், காலை 10 மணிக்கு மகா ருத்ர ஜப பாரானமும், மதியம் 2 மணிக்கு மேல் மகா ருத்ர ஜெப ஹோமம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் நடராஜருக்கும் சிவகாமசுந்தரிக்கும் மகா ருத்ர அபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.