கோத்தகிரி கருமாரியம்மன் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு

கோத்தகிரி கருமாரியம்மன் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு

Update: 2023-07-08 01:00 GMT

 கோத்தகிரி

சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை வேளையில் விநாயகரை பூஜிப்பது சிறப்பானதாக கூறப்படுகிறது. அதன்படி சங்கடஹர சதுர்த்தி நாளான நேற்று முன்தினம் மாலை கோத்தகிரி டானிங்டனில் கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அருகம்புல்லை சாற்றி, 108 மந்திரங்கள் கூறி பூஜைகள் நடந்தது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்