வீர நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு

மங்கை மடம் வீர நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது

Update: 2023-07-22 18:45 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் வீர நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச நரசிம்மர் கோவில்களில் ஒன்றாகும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை ஒட்டி பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சேஷ (பாம்பு) வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், அர்ச்சகர் பாலாஜி பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்