செல்வமுத்துக்குமார சாமிக்கு சிறப்பு வழிபாடு

வைத்தீஸ்வரன் கோவிலில் செல்வமுத்துக்குமார சாமிக்கு சிறப்பு வழிபாடு தருமபுரம் ஆதீனம் பங்கேற்றார்

Update: 2023-01-03 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வ முத்துக்குமாரசாமி, தன்வந்திரி, அங்காரகன் (செவ்வாய்) ஆகிய தெய்வங்கள் தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் உள்ள செல்வ முத்துக்குமார சாமிக்கு மாதம் தோறும் கார்த்திகை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் செல்வமுத்துக்குமார சாமிக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்