ராமபக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
ராமபக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
தலைஞாயிறு அருகே ஓரடியம்புலம் கிராமத்தில் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டு அருள்பாலித்து வரும் ராம பக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.