நடராஜருக்கு சிறப்பு வழிபாடு
நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
வெளிப்பாளையம்:
நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் தனி சன்னதியில் அருள் பாலிக்கும் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நடராஜர், சிவகாம சுந்தரிக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி, இளநீர், பால், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் நாகையில் உள்ள அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கட்டியப்பர் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகிய நாதர் கோவில், வீரபத்திர சுவாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நாகநாதர் கோவில், சட்டையப்பர் கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்திநாதேஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.