சாயாவனேஸ்வரர் கோவில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
பூம்புகார் அருகே சாயாவனேஸ்வரர் கோவில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
திருவெண்காடு:
பூம்புகார் அருகே சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காசிக்கு இணையான கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. நேற்று அஷ்டமியையொட்டி இக்கோவிலில் உள்ள பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.