ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
பாலவட ரங்கநாதர் கோவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது
கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பாலவட ரங்கநாதர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் அருள்பாலித்து வரும் ஆஞ்சநேயருக்கு 2-வது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பாலவட ரங்கநாதர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தன. அதனைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் மற்றும் ஆலய அர்ச்சகர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.