குன்னூரில் ஆதிபராசக்தி வார வழிபாடு சார்பில் சிறப்பு வழிபாடு
குன்னூரில் ஆதிபராசக்தி வார வழிபாடு சார்பில் சிறப்பு வழிபாடு
குன்னூர்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் சக்தி மாலை இருமுடி விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா வருகிற 4-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. மேலும், பிப்ரவரி 5-ம் தேதி தைப்பூச ஜோதி விழா விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளில் மாலை அணிவிக்கும் விழா நடைபெற்று வருகிறது இதன் ஒருகட்டமாக குன்னூர் ரெய்லிகாம்பவுண்ட் பகுதியில்உள்ள ஆதிபராசக்தி மன்றத்தில் இருமுடி விழா நடைபெற்றது. முன்னதாக சிறப்பு வழிபாடுகள் நடந்தது.