மாயூரநாதர், வதான்யேஸ்வரர் கோவில்களில் துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை மாயூரநாதர், வதான்யேஸ்வரர் கோவில்களில் துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு செய்தார்.

Update: 2023-09-19 18:45 GMT

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை உடனான வதான்யேஸ்வரர் (வள்ளலார்) கோவில் குரு பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் கடந்த 10- ந் தேதி குடமுழுக்கு நடந்தது. இந்தநிலையில் நேற்று இரவு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வதான்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். தொடர்ந்து கடந்த 3-ந் தேதி குடமுழுக்கு நடந்த திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை உடனான மாயூரநாதர்சாமி கோவிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின் அங்கும் சிறப்பு வழிபாடு செய்தார். இரு கோவில்களிலும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. வதான்யேஸ்வரர் கோவில், மாயூரநாதர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு இரு ஆதீனங்கள் சார்பிலும் தமிழக முதல்-அமைச்சர் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ளாததால் நேற்று 2 கோவில்களிலும் தமிழக முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்