கோவில்களில் சிறப்பு வழிபாடு
பொங்கல் பண்டிகையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிக்கல்:
பொங்கல் பண்டிகையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
நாகை அருகே சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சிக்கல் சிங்காரவேலருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. இந்த கோவிலில் தெற்கு முகமாக திரிபங்கி வடிவில் சங்கு சக்கரத்துடன் சாந்த சொரூபியாக துர்க்கையம்மன் அருள்பாலித்து வருகிறார்.
துர்க்கையம்மன் கோவில்
பொங்கல் பண்டிகையையொட்டி துர்க்கையம்மனுக்கு பல்வேறு திரவியங்கள், பழச்சாறு, இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
பின்னர் துர்க்கையம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.