கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-23 18:45 GMT

கூத்தாநல்லூர்:

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடியில், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிசேகம் செய்யப்பட்டது.

பின்னர், சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நன்னிலம்

நன்னிலம் அருகே உள்ள மூங்கில் குடி வரதராஜ பெருமாள் கோவிலில் சாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. முன்னதாக பால், பன்னீர், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. வடுவூர் தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோட்டை

திருமக்கோட்டை ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகிய சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்