கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆனிமாத பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவிலில் ஆனிமாத பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைமுன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைமுன்னிட்டு கற்பகவல்லி, சதுரங்கவல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.