சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-10-07 18:45 GMT

கூத்தாநல்லூர்:

பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், வில்வபொடி, மஞ்சள் பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகஆராதனைகள்வழிபாடுகள் நடந்தன.

வலங்கைமான்

இதேபோல வலங்கைமான் அருணாச்சலேஸ்வர் கோவில், கைலாசநாதர் கோவில், வைத்தீஸ்வரர் கோவில், காசி விசுவநாதர் கோவில், விருப்பாச்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், ஆவூர், பசுபதீஸ்வரர் கோவில், அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் கோவில், நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், சந்திரசேகரபுரம் சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்