சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-07-26 18:49 GMT

ராஜபாளையம்,

மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு வழிபாடு

பிரதோஷத்தையொட்டி ராஜபாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மாயூரநாத சுவாமி கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், பறவை அன்னம் காத்தருளிய சாமி கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், எலுமிச்சை, கரும்புச்சாறு உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதேபோல ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் தவநந்தி கண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில், வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சாத்தூர்

சாத்தூரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், இருக்கன்குடி கைலாசநாதர் கோவில், கோல்வார்பட்டி சிவன் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சுழி

திருச்சுழியில் உள்ள திருமேனி நாதர் கோவிலில் ஆடி மாத பிரதோஷ விழா நடைபெற்றது. முன்னதாக நந்திக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதி உலா நடந்தது.

இதில் நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்