முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-08-21 17:28 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே கோடியக்காடு முருகன் கோவிலில் ஆறுமுகக் கடவுளுக்கு ஆவணி மாத ஞாயிற்றுகிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்காரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணியருக்கு பால் தயிர், சந்தனம் இளநீர் பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்