அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
திருமக்கோட்டையில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருமக்கோட்டை:
திருமக்கோட்டையில் உள்ள பொன்னியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாரியம்மன் கோவிலில்களில் தைமாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மாலையில் மகா மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பட்டு பிரகார உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்் செய்தனர்.