அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தாயில்பட்டி,
விஜயாரங்காபுரம் ஊராட்சியை சேர்ந்த துரைசாமிபுரத்தில் ராஜா காளியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல வெற்றிலையூரணி, சுப்பிரமணியபுரம் மலைமீது உள்ள வேணுகோபால சுவாமி கிருஷ்ணன் கோவில், கீழச்செல்லையாபுரம் செல்லியம்மன் கோவில், சுந்தாளம்மன் கோவில், வெம்பக்கோட்டை அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில், மடத்துப்பட்டி மாரியம்மன் கோவில், கணஞ்சாம்பட்டி பாதாள துர்க்கை அம்மன் கோவில், சத்திரப்பட்டி மாரியம்மன் கோவில், மண்குண்டாம் பட்டி கிணற்றடி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.