அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆலங்குளம்,
ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆலங்குளம்
ஆலங்குளம் காளியம்மன் கோவில், ராசாப்பட்டி காளியம்மன் கோவில், கீழாண்மறைநாடு காளியம்மன் கோவில், உப்புபட்டிகாளியம்மன் கோவில், முத்துச்சாமிபுரம் காளியம்மன் கோவில், வலையபட்டி காளியம்மன் கோவில், ஏ.லட்சுமிபுரம் காளியம்மன் கோவில், நரிக்குளம் காளியம்மன்கோவில், நதிக்குடி காளியம்மன் கோவில், வி.புதூர் காளியம்மன் கோவில், சுண்டங்குளம் காளியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், நெய், இளநீர், தேன் உள்பட 18 வகையான பொருட்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர்
ஆடி மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள துள்ளு மாரியம்மன் கோவில், சிவகாசி தொழிற்பேட்டை முத்துமாரியம்மன் கோவில், சிவகாசி பஸ் நிலையம் துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோவில், ராஜபாளையம் அருகே ஆசிலாபுரத்தில் வண்டி மரிச்சான் காளியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதேபோல ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கங்கரக்கோட்டை ஊராட்சி கீழ செல்லையாபுரம் கிராமத்தில் சுந்தாளம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு 11 வகையான பொருட்களால் அபிேஷகம் நடந்தது.
சிறப்பு வழிபாடு
அதேபோல முத்தாண்டியாபுரம் காளியம்மன் கோவில், துலுக்கன்குறிச்சி காளியம்மன் கோவில், செவல்பட்டி காளியம்மன் கோவில், மீனாட்சிபுரம் காளியம்மன் கோவில், துரைச்சாமிபுரம் ராஜகாளியம்மன் கோவில், சத்திரப்பட்டி மாரியம்மன் கோவில், மண் குண்டாம்பட்டி கிணற்றடி அம்மன் கோவில், மடத்துப்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, தளவாய்புரம், சேத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
சிறப்பு யாகம்
வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதில் வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழைய ஏழாயிரம் பண்ணையில் உள்ள ஈஸ்வரன் கோவிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.