அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2022-07-22 17:08 GMT

வேதாரண்யம்:

ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

துர்க்கை அம்மன்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெற்கு முகமாக அமைந்துள்ள துர்க்கை அம்மனுக்கு ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இதேபோல கரியாப்பட்டினம் சந்தனமாரியம்மன் கோவில், செம்பகராயநல்லூர் செல்லியம்மன் கோவில், அகஸ்தியன்பள்ளி பத்தா்குளம் மாரியம்மன், வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன், தோப்புத்துறை வனதுர்க்கையம்மன் கோவில், கள்ளிமேடு பத்ரகாளியம்மன் உட்பட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

வாய்மேடு

வாய்மேட்டை அடுத்த தென்னடார் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், திருநீறு, தேன், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திட்டச்சேரி

திருமருகல் அருகே வாழ்மங்கலத்தில் வீரமாகாளியம்மன் கோவிலில் ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அம்மனுக்கு மஞ்சள்பொடி, மாப் பொடி, தேன், திரவியப்பொடி, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேக ஆராதனை, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு க தரிசனம் செய்தனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

நாகை நீலாயதாட்சியம்மன் கோவில்

நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அபிஷேக, ஆராதனை, மலர் அலங்காரம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்