விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சங்கடகர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-10 18:45 GMT


சங்கடகர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சங்கடகர சதுர்த்தி

சங்கடகர சதுர்த்தியையொட்டி நாகை பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக நாகை காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் ஏழை பிள்ளையார் கோவில், நடுக்கம்தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவில் செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், வல்லப கணபதி, மாவடி பிள்ளையார், சாபம் தீர்த்த விநாயகர், விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமன் தோட்ட செல்வ விநாயகர், மறைமலைநகர் நவசக்தி விநாயகர், வீரசொக்கநாத விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

வேதாரண்யம்

இதேபோல் வேதாரண்யம் நகரில் உள்ள அச்சம் தீர்த்த விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கற்பகவிநாயகர் கோவில், கட்சுவான் முனீஸ்வரர் கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர் சிறப்பு பூஜைகள் நடந்தது.

குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவில் விநாயகர், மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர், ஆறுக்காட்டுத்துறை விநாயகர், வேதாரண்யம் கோவில் வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர், தேத்தாக்குடி சித்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சங்கடகர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்