விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நொய்யல் அருகே முத்தனூரில் வருண கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயருக்கு பால், இளநீர், சந்தனம், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.