விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-12-26 19:24 GMT

கரூர் முத்தனூரில் பிரசித்தி பெற்ற வருண கணபதி கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல், புன்னம், சேமங்கி, மரவாபாளையம், நொய்யல், குறுக்குச்சாலை, அண்ணாநகர், அத்திப்பாளையம், குப்பம், உப்பு பாளையம், கரைப்பாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்