விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-10-13 18:49 GMT

வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில்தேய்பிறை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பால், இளநீர்,பன்னீர், சந்தனம், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களுடன்அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்கள், அருகம்புல்களால்மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் கோவிலில் உள்ள விநாயகர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.இதேபோல் வேலாயுதம்பாளையம், நொய்யல் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்