விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

திருச்சுழியில் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-09-11 18:42 GMT

திருச்சுழி, 

ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு திருச்சுழி பகுதிகளில் உள்ள திருச்சுழி திருமேனிநாதர் கோவில், பாறைகுளம் வெள்ளியம்பலநாதர் சிவன் கோவில், பி.தொட்டியாங்குளம் பிள்ளையார் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக விநாயகருக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்