விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-08-15 18:27 GMT

நீடாமங்கலம்:

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் எழுந்தருளியுள்ள கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞாகணபதிக்கு மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக விநாயகர்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர், மகாமாரியம்மன் கோவிலில் உள்ள சதுர்வேத விநாயகர், சந்தானராமர் கோவிலில் உள்ள தும்பிக்கையாழ்வார், காசிவிசுவநாதர் கோவிலில் உள்ள விநாயகர், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் உள்ள விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை தெற்கு தெருவில் உள்ள ராஜவிநாயகர் கோவில், மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஞானசக்தி விநாயகர் கோவில் மற்றும் ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு கொழுக்கட்டை வைத்து படைக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்