வரதராஜபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
திருமருகல் வரதராஜபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகலில் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலில் நேற்று ஆவணி மாத அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக வரதராஜபெருமாளுக்கு மஞ்சள் பொடி,சந்தனம்,தேன், பஞ்சாமிர்தம்,பால், தயிர் உள்ளிட்டவைகளால் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.