உக்கிர நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருக்குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

Update: 2023-02-20 18:45 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 நரசிம்மர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களை ஒரே நாளில் வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம் என்பது ஐதீகம். இந்த கோவில்களில் முதன்மையாக திகழும் திரு குரவளூர் உக்கிர நரசிம்மர் கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக நரசிம்மருக்கு பால், பஞ்சாமிர்தம், இளநீர், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர்கள் பார்த்தசாரதி பட்டாச்சாரியார், ராஜேந்திரன் பட்டாச்சாரியார் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்