சப்தரிஷீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
சப்தரிஷீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
லால்குடி:
லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோவிலில் நேற்று கேதார கவுரி விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சந்திரசேகரர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, விரத காட்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.