சாய்ராம் கோவிலில் சிறப்பு வழிபாடு
கந்தபுரம் சாய்ராம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
உடன்குடி:
உடன்குடி அருகேயுள்ள கந்தபுரம் சத்குருசாய்ராம் கோவிலில் புத்தாண்டு தினத்தையொட்டி 2 நாட்கள் சிறப்பு வழிபாடு நடந்தது. முதல் நாள் சிறப்பு பூஜையும், 2-ம்நாள் புத்தாண்டு அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாய்பாபாவுக்கு பல்வேறு அபிஷேகங்கள். அலங்காரங்கள், மங்கள ஆர்த்தி மற்றும் 108 சாய்பாபா மந்திரங்களை சொல்லி, பாடல்கள் பாடப்பட்ட சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நண்பகல் 12 மணிக்கு சாய்பாபா மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.