பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

வரதராஜபெருமாள் கோவிலில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-03-31 19:45 GMT

ஆலங்குளம், 

ஆலங்குளம் வரதராஜபெருமாள் கோவிலில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. விழாவினை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால்,தயிர், நெய், இளநீர், தேன் உள்பட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்