மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-02-03 19:13 GMT

சாத்தூர்,

இருக்கன்குடியில் மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சமபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், இருக்கன்குடி இன்ஸ்பெக்டர் மயில் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்