மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நொய்யல் அருகே குந்தாணிபாளையம் காலனியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இதையடுத்து பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் மாரியம்மன், மதுரை வீரன், விநாயகர், கன்னிமார் சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.