மகா மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-09-04 16:33 GMT

வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆவணி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று மகா மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையான வருகிற 11-ந்தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்