சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சக்தி விநாயகருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போன்று சங்கராபுரம் வாசவி கோவில் வளாகத்தில் உள்ள மஹோற்கடகணபதி, பொய்க்குணம் சாலையில் உள்ள நவசக்தி விநாயகர், திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வன்னி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயாகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.