சாத்தாயி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
சாத்தாயி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நங்கவரத்தில் பிரசித்தி பெற்ற சாத்தாயி அம்மன் மற்றும் மலையாள சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை திரளான பக்தர்கள் உய்யகொண்டான் ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
பின்னர் அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மலையாள சுவாமிக்கும் அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.