அட்சயலிங்க சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-06-16 17:07 GMT

சிக்கல்:

கீழ்வேளூரில் அட்சயலிங்க சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அஞ்சுவட்டத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலை, திருவிளக்கு பூஜையும், அம்பாள் உள் பிரகார புறப்பாடு மற்றும் ஊஞ்சல் உற்சவமும் அதைதொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சிறப்பு மலர் அலங்காரத்தில் அஞ்சுவட்டத்தம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்