சீர்காழி படித்துறை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சீர்காழி படித்துறை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

Update: 2022-09-24 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி புழுகாபேட்டை தெருவில் படித்துறை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. துளசி, வடை மாலை சாத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இது போல் வடரங்கம் சிவன் கோவில், சீர்காழி சட்டைநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்