தை அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தை அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-01-21 18:30 GMT

கரூரில் பிரசித்தி பெற்ற மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் மற்றும் முக்கிய விஷேச நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் அதேபோல் நேற்று தை மாத அமாவாசையையொட்டி மாரியம்மன் கோவிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனுக்கு மதியம் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

இதேபோல் கரூர் நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

நொய்யல்-வேலாயுதம்பாளையம்

நொய்யல் செல்லாண்டியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர்,பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் செல்லாண்டியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வேலாயுதம்பாளையத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தை மாத அமாவாசையையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்